For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” - இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!

08:00 PM May 29, 2024 IST | Web Editor
“கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது”   இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு
Advertisement

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (மே 29) முடிவடையும் நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 30) முதல் 3 நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றார். 

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபம் அல்லது அங்குள்ள தியானம் மண்டபத்தில் ஒரு நாள் (மே 31) தியானம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பின் (ஜூன் 1) பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜுன் 1-ம் தேதி தியானத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தபின், காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஜூன் 1-ம் தேதிக்கு பின் பிரதமர் மோடிக்கு அனுமதி அளிக்கலாம். தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement