”விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” - பழனிசாமிக்கு வன்னியரசு பதில்!
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ”விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும்” எனக் கூறினார்.
இந்த நிலையில் இன்று நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா கூட்டணி என்பது விடுதலைச் சிறுத்தைகளின் கடும் முயற்சியால் உருவானது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” என்றும் பதிலளித்தார். மேலும் அவர், எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் அசைன்மென்ட் காரணமாக இவ்வாறு பேசுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் “இந்த முறை கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அதனை எங்கள் தலைவர் நிறைவேற்றுவார். எங்கள் கட்சிக்கு கூடுதல் இடம் கொடுப்பது தமிழகத்திற்கு நல்லது” என தெரிவித்தார்.