For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

11:37 AM Dec 08, 2023 IST | Syedibrahim
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை   ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
Advertisement

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் ஏற்கனவே இருந்த 6.5 சதவிகிதம் என்ற நிலையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதியான இன்று வரை ஆர்பிஐயின் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது.  6 உறுப்பினர்களை கொண்ட நிதி கொள்கை கூட்ட குழுவில் 5 பேர் வட்டி விகித உயர்வுக்கு எதிராக வாக்களித்தனர்.  இதனால் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிதிக் கொள்கைக்கூட்டத்தில், தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை.  அதாவது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு,  ஆர்பிஐயும் தொடர்ந்து எடுத்து வருகின்றன.
Advertisement

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர், சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழல்கள் காரணமாக 2022ம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,  உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். 
மேலும் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி எதிர்பார்ப்புகளை தாண்டி 7.6 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  ஆர்பிஐயின் முடிவு காரணமாக வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை.  இதனால் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags :
Advertisement