Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய பெண்! ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!

09:30 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு நைஜீரிய பெண் கடத்தி வந்த போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.  

Advertisement

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவான என்.சி .பி எனப்படும், நார்கோடிக் கண்ட்ரோல் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, என்.சி.பி தனிப்படையினர்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகளை, என்.சி.பி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

 

அப்போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த Friedelin April  (54) என்பவர் சுற்றுலா பயணி விசாவில், எத்தியோப்பியாவின், அடிஸ் அபாபாவிலிருந்து,இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார். இதற்கிடையே, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அவர் வைத்திருந்த பையின் அடிப்பாகத்தில்,ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது.

அதைத் திறந்து பார்த்த போது, போதை பவுடர் இருந்ததை கண்டு பிடித்தனர்.உடனடியாக நைஜீரியா பெண் பயணியை, என்.சி.பி அதிகாரிகள் சென்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர்.இந்நிலையில் இந்த போதை பவுடரின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி என்பதும் தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : உத்தரப்பிரதேசத்திற்கு 22, தமிழ்நாட்டுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள்! – நாடு முழுவதும் 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி!

பின்னர் நைஜீரியா பெண் பயணி கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது ;

"இந்த போதை பொருளை சர்வதேச போதை கடத்தும் கும்பலிடம் இருந்து வாங்கினேன். அந்த சர்வதேச போதை கடத்தும் கும்பலில்  நான் காண்ட்ராக்ட் முறையில் பணியில் இருந்து வருகிறேன்.  இந்த போதை பொருளை, அடிஸ் அபாபாவிலிருந்து, விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் இருந்து ரயில் மூலம், மும்பை சென்று, அங்கு இந்த போதைப் பொருளில் பாதி அளவில்,மும்பையில் உள்ள போதை கடத்தும் கும்பல் இடம் ஒப்படைத்து விட்டு, மீதி பாதி போதை பொருளை,மும்பையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு எடுத்து சென்று, டெல்லியில் உள்ள போதை பொருள் கடத்தும் கும்பல் இடம் ஒப்படைக்க இருந்தேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை அடுத்து என்.சி.பி அதிகாரிகள் மும்பை, டெல்லி மாநகரில் உள்ள என்.சி.பி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து,நைஜீரிய பெண்ணிடம் இருந்து,மும்பை, டெல்லியில் போதை பொருளை வாங்க இருந்த,சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டிய போதைப் பொருள்,சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தது ஏன்? என்றும் என்.சி.பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
arrestedChennaiDrugsEthiopiaNigerian womanPoliceseizedsmuggled
Advertisement
Next Article