நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி - மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
மதுரை மாவட்டம் பரவையில் மங்கையர்கரசி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெற்றி ஐஏஎஸ் அகாடமி இணைந்து ஸ்டெம் குவீஸ் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் நியூஸ்7 தமிழின் சீனியர் ஸ்ட்ராடஜிக் அட்வைசர் ஷாம், வெற்றி ஐ.ஏ.எஸ் அகாடமி இணை இயக்குனர் கருணாகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று தங்களது உரையாற்றல் மூலம் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தனர்.
இதனையடுத்து, ஸ்டெம் குவீஸ் போட்டியில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளிடம் 20 பொது வினாக்கள் அடங்கிய நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 12 மாணவிகள் 6 அணிகளாக பங்கேற்றனர். இப்போட்டி மாணவிகளின் அறிவுத்திறன், ஞாபசக்தியை மேம்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. ஸ்டெம் குவீஸ் போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.
மங்கையர்கரசி கல்விக் குழுத் தலைவர் அசோக்குமார், நியூஸ்7 தமிழின் சீனியர் ஸ்ட்ராடஜிக் அட்வைசர் ஷாம் மற்றும் மங்கையர்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உமா பாஸ்கர், வெற்றி ஐஏஎஸ் அகாடமி இணை இயக்குனர் கருணாகரன் ஆகியோர், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மட்டும் சான்றிதழ்களை வழங்கினர்.
இறுதியில் ஸ்டெம் குவீஸ் போட்டியில் பங்கேற்ற மாணவிகள், வினாடி வினா போட்டிகள் தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இது போன்ற போட்டிகளில் பங்கேற்று திறன்களை வளர்த்துக் கொள்ளப் போவதாகவும் கருத்து தெரிவித்தனர்.