பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார்.
தமிழ்நாடு அரசியல் சூழல், பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன் அவருடன் சுமார் ஒரு மணி நேரம் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.