தேர்தல் விதிகளிலிருந்து நயினார் நாகேந்திரனுக்கு விலக்கு... ஏப்.13 பாஜக புதிய தலைவர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை கட்சித் தலைமை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் நாளை (ஏப். 11) விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பாஜக அறிவித்துள்ளது.
அதில், பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாஜகவில் 10 ஆண்டுகள் நிரம்பியவர்தான் பாஜக தலைவராக முடியும் என்ற விதிமுறையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக தலைவராவதற்கான சாத்தியக்கூறு இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் விதிமுறைகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் 8 ஆண்டுகள் கட்சியில் இருப்பதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நாளை அவர் மாநிலத் தலைவருக்கான தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதி யார் பாஜகவின் புதிய மாநில தலைவர் என்று அறிவிக்கப்பட உள்ளது.