Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியா? - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு!

09:50 AM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

வருகிற மக்களவைத் தேர்தலில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல்  02.03.2024 அன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.

அதன்படி  195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர் .  மாநிலவாரியாக அறிவிக்கப்பட்ட  வேட்பாளர்களின் பட்டியலில் பல நட்சத்திர வேட்பாளர்களும், தற்போதைய அமைச்சர்களும், முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றன. முக்கியமாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மத்திய தலைமை வெளியிட்ட 195 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலில், தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களின் பெயர் இடம்பெறவில்லை . அதேபோல நயினார் நாகேந்திரன் பெயரும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில் பாஜக தரப்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் கருத்துக் கேட்புக் குழு இன்று விரைகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் 2 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டு, வேட்பாளர்கள் குறித்து பாஜக கருத்து கேட்கிறது.

கருத்துக் கேட்புக்கு பின்பு, மாநில அளவிலான தேர்தல் குழுவிடம், பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும். அதனை கொண்டு, உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நாளை டெல்லி செல்லும் மூத்த நிர்வாகிகள் குழுவிடம் ஒப்படைக்கப்படும். தயாரிக்கப்பட்ட உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை, மாநில தேர்தல் குழுவானது, டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கும்

இந்த நிலையில் பாஜக நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கேட்பில் நெல்லை தொகுதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்று வெளியாக உள்ள மத்திய பாஜக தலைமையின் வேட்பாளர்கள் பட்டியலில், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் பெயர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags :
BJPBJP Candidatescandidates listElection2024Lok sabh Election2024nainar nagendran
Advertisement
Next Article