For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தேசிய விளையாட்டு தினம்" - நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12:18 PM Aug 29, 2025 IST | Web Editor
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 தேசிய விளையாட்டு தினம்    நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Advertisement

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நம்முடைய பாரத தேசம் பல விளையாட்டுகளின் தாயகமாக இருந்து வருகிறது.

Advertisement

நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டாடவும், இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை போற்றும் விதமாகவும், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளான இன்றைய தினத்தை நாம் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம்.

இன்றைய தினத்தில் நம் தேச மக்கள் அனைவரும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஏதேனும் ஒரு விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டே நம் உடலையும் மனதையும் ஒருசேர சுறுசுறுப்புடன் வைத்திருக்கும் மாபெரும் ஆயுதமாகும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement