"தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை" - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !
தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"தேசிய கல்விக் கொள்கை 2020ல் ஹிந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. தாய்மொழி அடிப்படையில் கல்வி அமையும் என்றே கூறியுள்ளோம். தமிழகத்தைப் பொருத்தவரை அது தமிழாகவே இருக்கும்.
சில நபர்களின் அரசியல் நோக்கங்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. தேசிய கல்விக் கொள்கையானது, நாட்டிலுள்ள பல்வேறு மொழிகள் மீதும் கவனம் செலுத்துகிறது. அது, ஹிந்தியோ, தமிழோ, ஒடியாவோ அல்லது பஞ்சாபியோ, அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக சிலர் இதனை எதிர்க்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.