For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டி!” - பரூக் அப்துல்லா கருத்தால் INDIA-கூட்டணியில் அடுத்த சலசலப்பு!

05:46 PM Feb 15, 2024 IST | Web Editor
“ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டி ”   பரூக் அப்துல்லா கருத்தால் india கூட்டணியில் அடுத்த சலசலப்பு
Advertisement

INDIA - கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு மற்றும் காஷ்மீரில்  தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Advertisement

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான INDIA - கூட்டணியில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் INDIA - கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே இந்த அணியை விட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அணி மாறியது சலசலப்பை ஏற்படுத்தியது . ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டன. INDIA - கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குப் போய்விட்டது.

இதனிடையே, கடந்த மாதம் பேசிய பரூக் அப்துல்லா,  INDIA - கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பகிர்வு ஏற்பாடுகள் தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லாதது குறித்து கவலை தெரிவித்தார்.  மேலும் தேசத்தைப் பாதுகாக்க, நமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறியுருந்தார்.

இந்நிலையில் அண்மையில், கிரிக்கெட் ஊழல் தொடர்பாக பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஶ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா இன்று (15.02.2024) செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, லோக்சபா தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறக் கூடும். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் INDIA - கூட்டணியின் காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால்தான் இம்முடிவை எடுத்தோம் என்றார் பரூக் அப்துல்லா.

அத்துடன் இந்த பேட்டியின் போதே, எதிர்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெறக் கூடும் என்பதையும் சூசகமாக தெரிவித்தார் பரூக் அப்துல்லா.

Tags :
Advertisement