For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஊழல் நடப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல" - நடிகர் கமல்ஹாசன் பேச்சு!

12:38 PM Jun 25, 2024 IST | Web Editor
 ஊழல் நடப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல    நடிகர் கமல்ஹாசன் பேச்சு
Advertisement

ஊழல் நடப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல என  ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.  இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ரகுல் ப்ரீத் சிங்,  ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படத்தின் ‘இந்தியன் – 2’  திரைப்படத்தின் பாரா,  நீலோற்பலம்,  காலண்டர், கதறல்ஸ்,  கம் பேக் இந்தியன்,  சகசக ஆகிய அனைத்து பாடல்களும் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.  அண்மையில்,  ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.  இந்த நிலையில் , சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது.  இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன்,  எஸ்ஜே சூர்யா,  சித்தார்த்,  இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள் : நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் – நாகை மாலியின் தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

இந்நிலையில்,  இந்தியன் 1 திரைப்படம் தொடங்கி இந்தியன் 2 திரைப்படம் வரை ஆரம்பத்தில் இருந்து ஊழல் தொடர்ந்து வருகிறது.  அரசியல்வாதிகள் தான் இதற்கு காரணமா? என்று நடிகர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது :  "ஊழல் நடப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல; பொதுமக்களாகிய நாமும் தான் காரணம்;  நாம் இல்லாமல் இந்த ஊழல்கள் நடக்குமா?" என கேள்வி எழுப்பினார்.

Tags :
Advertisement