நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி புகழாரம் !
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனிடையே விவசாயிகளுக்காகப் போராடி வரலாறு படைத்த நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டை முன்னிட்டு, "துடியலூர் - கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நாராயணசாமி நாயுடு பெயர் சூட்டப்படும்.
அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
உழவர்களின் நல்வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்த உழவர் பெருந்தலைவர் திரு. சி. நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குவதுடன்,
மாண்புமிகு அம்மாவின் அரசு சார்பில்
திரு. சி. நாராயணசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதை பெருமையுடன்… pic.twitter.com/9YX2gk4jxP— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) February 6, 2025
" உழவர்களின் நல்வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்த உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குவதுடன், அம்மாவின் அரசு சார்பில் சி. நாராயணசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.