டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு...!
தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
06:56 PM Dec 13, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை , மக்கள் சந்திப்பு என தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” என்னும் பெயரில் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித நயினார் நாகேந்திரன் அவரிடம் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது பெற்ற மனுக்களை அளித்துள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, கடந்த 32 நாட்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன். இந்த நிகழ்வில் பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்”
என்று தெரிவித்துள்ளார்.
Advertisement