For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொல்கத்தாவில் ’மெஸ்ஸி’ நிகழ்ச்சியில் ரகளை ; மன்னிப்பு கோரிய மம்தா பானர்ஜி...!

கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸியைப் பார்க்க முடியாததால் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.
03:58 PM Dec 13, 2025 IST | Web Editor
கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸியைப் பார்க்க முடியாததால் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.
கொல்கத்தாவில் ’மெஸ்ஸி’ நிகழ்ச்சியில் ரகளை     மன்னிப்பு கோரிய மம்தா பானர்ஜி
Advertisement

பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பயணமக இந்தியா வந்துள்ளார். இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் நிறுவட்டப்பட்டுள்ள 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலையை அவர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Advertisement

இதனிடையே மெஸ்ஸியின் வருகையையொட்டி சால்ட்லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்காக பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குப் கொல்கத்தாவிலிருந்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மெஸ்ஸியை பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தனர். அங்கு வந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

ஆனால் மெஸ்ஸி மைதானத்திற்குள் நுழைந்தவுடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டு அமைச்சர் அருப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 70 முதல் 80 பேர் கொண்ட குழு அவரைச் சூழ்ந்து கொண்டது. இதனால் ரசிகர்களால் மெஸ்ஸியை கேலரிகளில் இருந்து பார்க்க முடியவில்லை. இதன் காரணாமக கோபமடைந்த  ரசிகர்கள் கோஷமிடத் தொடங்கினர். மேலும் மெஸ்ஸி பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார்.

இதனையடுத்து ரசிகர்களில் ஒரு பகுதியினர், மைதானத்திற்குள் நுழைந்து, நாற்காலிகள், கூடாரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் தண்ணீர் பாட்டில்களையும் மைதானத்தில் எறிந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

”சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். மீண்டும் ஒருமுறை, அனைத்து விளையாட்டு ஆர்வலர்களிடமும் எனது மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement