For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

என்னது 2 மாதங்களுக்கு ரூ.30,000? மின்கட்டணத்தால் ஷாக் ஆன நபர்!

03:35 PM Jun 27, 2024 IST | Web Editor
என்னது 2 மாதங்களுக்கு ரூ 30 000  மின்கட்டணத்தால் ஷாக் ஆன நபர்
Advertisement

டெல்லியைச் சேர்ந்த  2 மாதங்களுக்கு ரூ. 30,000 மின்கட்டணம் செலுத்தியதாக Reddit-ல் பகிர்ந்த பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

Advertisement

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  தண்ணீர் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  இந்த வெயில் மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பாக்கெட்டுகளையும் பாதித்து வருகிறது.  ஒருபக்கம் குடிநீரை மக்கள் காசு கொடுத்து வாங்கி வரும்நிலையில் மறுபக்கம் மின்கட்டணம் உயர்ந்து வருகிறது.

டெல்லியை சேர்ந்த ஒருவர் ஜூன் மாதத்தில் மின்கட்டணமாக மட்டும் ரூ. 30,280 கட்டியதாக தெரிவித்துள்ளார். இதனை Reddit-ல் அவர் பகிர்ந்துள்ளார். அதில்,

Pain. How is this even possible.
byu/Agitated-Variety-732 indelhi

பணத்தை மிச்சப்படுத்தலாம் என புது ஏசி வாங்கினேன்.  ஆனால் இது உண்மையில் பணத்தை சேமிக்கவில்லை.  4 ஏசிகளில் குறைந்தது இரண்டு ஒரே நேரத்தில் இயங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.  இவரின் இந்த பதிவிற்கு பல கருத்துகள் குவிந்து வருகின்றன. அதில் ஒருவர், கடந்த முறை ரூ.40,000 மின்கட்டணம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement