For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முத்தமிழ் முருகன் மாநாடு - சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

12:22 PM Jan 04, 2025 IST | Web Editor
முத்தமிழ் முருகன் மாநாடு   சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Advertisement

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெற்றது.

மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதலமைச்சர் வெளியிட்டார். முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். தலைமைச் செயலர் முருகானந்தம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
Advertisement