For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: பணிகள் தீவிரம்!

10:20 AM Nov 25, 2023 IST | Web Editor
மும்பை அகமதாபாத் புல்லட் ரயில்  பணிகள் தீவிரம்
Advertisement

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ் 100 கி.மீ.க்கு பாலங்கள், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் மும்பை,  குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே ரூ.1.08 லட்சம் கோடி செலவில் அதிவேக புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்துக்கான செலவை மத்திய,  மாநில அரசுகள் பகிர்ந்துள்ளன.

அதன்படி,  திட்டச் செலவில் ரூ.10,000 கோடியை மத்திய அரசும், ரூ.10,000 கோடியை குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகளும் ஏற்றுள்ளன.  ஜப்பானிடம் இருந்து 0.1 சதவீத வட்டிக்கு பெறப்படும் கடன் மூலம் எஞ்சிய செலவு கையாளப்பட உள்ளது.  புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணியை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) மேற்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: நகரத் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி!

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பாலங்கள்,  250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது.

தற்போது 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பார் மற்றும் ஔரங்கா ஆறுகள்,  நவ்சார் மாவட்டத்தில் உள்ள பூர்னா,  மிந்தோலா,  அம்பிகா மற்றும் வெங்கானியா ஆறுகள் மீது கட்டப்பட்ட பாலங்களும் அடங்கும் என்றும் என்ஹெச்எஸ்ஆர்சிஎல் குறிப்பிட்டுள்ளது.

Tags :
Advertisement