Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலை விபத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு... சென்னையில் சோகம்!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.
02:02 PM May 17, 2025 IST | Web Editor
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement

சென்னை மாதவரத்தில் இருந்து அண்ணாநகர் நோக்கி டாரஸ் லாரி ஒன்று மண் லோடு ஏற்றிச் சென்றது. இந்த லாரி பாடி மேம்பாலத்தில் ஏற முயன்றது. அதே நேரத்தில், சரவணன் என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை கரோலினுடன் இருசக்கரத்தில் வாகனத்தில் அவ்வழியாக வந்துக்கொண்டிருந்தார். அப்போது இவர்களின் வாகனம் லாரி மோதியதாக கூறப்படுகிறது. பிரியா மீது டாரஸ் லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சரவணன் மற்றும் அவரின் குழந்தையை மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை கிசிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதற்கிடையே, மாதாவாரத்தில் இருந்து அண்ணாநகர் செல்லும் பாடி மேம்பாலம் அருகே வாகன ஓட்டிகள் ஒன்று சேர்ந்து கனரக வாகனங்களை வழி மறித்தனர். அப்போது அவர்கள், "நகரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் எப்படி வருகிறது" என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாதவரத்தில் இருந்து அண்ணாநகர் நோக்கி செல்லக்கூடிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினரிடமும் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
AccidentArrestChennaihospitalnews7 tamilNews7 Tamil UpdatesPoliceRoad accident
Advertisement
Next Article