நெடுஞ்சாலையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் வழிப்பறி - தீவிர தேடுதல் வேட்டையில் #TanjorePolice!
தஞ்சை அருகே இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடிக்கும் மங்கி குள்ளா கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தஞ்சை மாதா கோட்டை சாலை அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சரக்கு வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமாரும், அவரது மனைவி திலகவதியும் பாபநாசம் அருகில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சுமார் இரவு 9:30 மணிக்கு விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திட்டை அருகே வெண்ணாற்று பாலம் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குரங்கு குல்லா அணிந்த 3 கொள்ளையர்கள் செந்தில்குமார் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். நிற்க மறுத்த செந்தில்குமார் மீண்டும் செல்ல கையில் இருக்கும் ஆயுதத்தால் செந்தில்குமாரை தாக்கி வலிமறித்து, திலகவதியின் ஆறரை பவுன் தாலி செயினை அறுக்க முயற்சி செய்துள்ளனர்.
திலகவதி தாலி செயினை இறுக்கிப்பிடித்த நிலையில் சத்தம் போட அவரை தாக்கிவிட்டு தாலிச் சங்கிலியை பிடுங்கிவிட்டு கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செந்தில்குமாரிடம் தேவையான தகவலை பெற்றுக் கொண்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கி குல்லா கொள்ளைகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இரவு நேரம், ஆளில்லா இடத்தை தேர்வு செய்து இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் குரங்குக் குல்லா கொள்ளையர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே தஞ்சை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.