Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எமர்ஜென்சி" குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்!

03:02 PM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

அவரசநிலை பிரகடனம் எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்ததற்கு காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். 

Advertisement

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது.  முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர்.  நேற்று பதவியேற்காத எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். இதனிடையே நேற்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எமர்ஜென்சியை விமர்சித்து பேசியிருந்தார்.

மேலும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அதிகாரத்தைப் பிடிக்க,  அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கைகளையும் புறக்கணித்து,  நாட்டை சிறையில் அடைத்தது. அவசர நிலையை கொண்டு வந்தவர்கள் அரசியலமைப்பின் மீது அன்பு காட்ட உரிமை இல்லை.  கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள் காங்கிரஸ்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எமர்ஜென்சி காலம் நமக்கு உணர்த்தியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.  உண்மைதான். இன்னொரு விஷயம் என்னவென்றால் மற்றுமோர் எமர்ஜென்சியை தடுக்க வேண்டும் என அரசியலமைப்பு மக்களுக்கு நினைவுபடுத்தியது.

பாஜகவின் எண்ணங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் 18-வது மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர்.  எந்த ஒரு மனிதரும் ஆட்சியாளரும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பை மாற்றக்கூடாது என மக்கள் கூறியுள்ளனர்.  இந்தியா ஜனநாயக,  மதச்சார்பற்ற,  முற்போக்கு கொள்கைகள் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக தொடர்ந்து நீடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
BJPCentral governmentCongressP ChidambaramPM Modi
Advertisement
Next Article