"மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்" - மல்லிகார்ஜுன கார்கே!
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட 32 இடங்கள் குறைவாக அக்கட்சி பெற்றது. இருப்பினும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றதால் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பணியிலிருந்து நீக்கியதால் நிறுவனத்தின் முக்கிய கோப்பைகளை ஹேக் செய்து அழித்த முன்னாள் ஊழியர்! பறந்து வந்து பிடித்துச் சென்ற சிங்கப்பூர் போலீஸ்!
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
“தற்போதைய மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். மோடியின் இந்த அரசை மக்கள் சிறுபான்மை அரசாக ஆக்கி இருக்கிறார்கள். கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார். கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று அவர் கூறி இருக்கிறார். அவற்றையே நான் திரும்பச் சொல்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.