"மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
12:43 PM Sep 14, 2025 IST | Web Editor
Advertisement
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில்
Advertisement
* 258 பேர் உயிரிழந்தனர்
* 1,108 பேர் காயமடைந்தனர்
* 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன
* 60,000 பேர் இடம் பெயர்ந்தனர்
* பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நேற்று மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ 7,300 கோடி திட்டங்கள், ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.