For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

07:21 AM Feb 25, 2024 IST | Jeni
எம் எல் ஏ  பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி
Advertisement

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், இந்த அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் கூறினார். பாஜகவில் இணைந்த விஜயதரணி, காங். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : WPL 2024 : யு.பி. வாரியர்ஸை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!

இந்நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு அவர் எழுதிய கடிதத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ள விஜயதரணி, “எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். I am resigning from my seat as a Member of Legislative Assembly” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement