திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!
திருப்பூர் உடுமலை அருகே பள்ளி மாணவி மற்றும் இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் தர்சனா (11). சென்னையை சேர்ந்த ஆகாஸ் (19) என்பவருடன் தர்சனாவிற்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தர்சனா கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் தர்சானாவை தேடி வந்தனர்.
இதற்கிடையே குறிச்சிகோட்டை அடுத்த மானுபட்டி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் 3 சடலங்கள் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்டது தர்சனா, ஆகாஸ் மற்றும் மாரிமுத்து என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.