Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அமைச்சர் ராஜா மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

விழாக்களில் திமுகவினர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதை கைவிட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
07:37 AM Aug 26, 2025 IST | Web Editor
விழாக்களில் திமுகவினர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதை கைவிட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி. சென்னையில் 1500 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய இடங்களில் தான் வைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சிலைகளை வைப்பார்கள். சிலைகளுக்கான கட்டுபடுத்துவது ஏன். கெடுபிடிகளை விட்டு சிலைகளை வைக்க அரசு அனுமதிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மட்டும் வைப்பதில்லை.

Advertisement

ரத்ததானம், அன்னதானம், மருத்துவ முகாம் என சேவை மனபான்மையுடன் நடக்கிறது. இப்போதே கட்டுபாடுகளை விதித்து உங்கள் இந்துமத உணர்வை பதிவு செய்யாதீர்கள். விஞ்ஞான பூர்வமான முன்னேற்றங்களை எதுவும் சொல்லவில்லை. இதிகாசங்கலில் நிலவுக்கு அனுமான் சென்றார் என்ற பதிவு இருக்கிறது என்று சொல்கிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா. அனுராக் தாகூர் நம்பிக்கை இருக்கிறது சொல்கிறார். முன்னோடியாக தகவல் இருப்பதாக கூறுகிறார். மெய்ஞான்மும் விஞ்ஞானமும் ஏற்கனவே இணைந்து தான் இந்திய நாட்டில் பரிமாண வளர்ச்சியில் வலர்ந்து கொண்டு இருக்கிறது.

ராமர் என்ன என்ஜீனியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது நம்பிக்கை இருக்கிறது. ஒப்பீட்டு பார்ப்பதில் தவறு இல்லை. இன்றைய அரசங்கம் தான் நிலவுக்கு வின்வெளியை அனுப்பி இருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாவின் டிரோனுக்கு 30 ஆயிரத்திற்கு மேல் ஆர்டர் தந்து உள்ளனர். இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள். அனுராக் தாகூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தை பாருங்கள்.

தூய்மை பணியாளர்கள் பிரச்சனைகளை அரசு சரியாக கையாண்டு அவர்களுக்கு என்ன தேவையோ தீர்த்து வைக்க வேண்டும். இளநிலை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட போராட்டங்களை அறிவித்து உள்ளனர். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன செய்தது. சொன்னதையாவது செய்ய வேண்டுமா. தூய்மை பணியாளர்களுக்கு போராடி கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் சினிமா, ஷாப்பிங் போகிறார். பிரச்சனை என்னவென்று கேட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை சிபி.ராதாகிருஷ்ணன் பார்த்து கொண்டு இருக்கிறார். மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் முதலமைச்சரை தொடர்பு கொண்டு ஆதரவை கேட்டு உள்ளார். ஆனால் முகமூடி அணிந்து வருகிறார் என்று கூறுகின்றனர். ஷோபியா சுரேஷி ராணுவ அதிகாரி. இஸ்லாமிய அதிகாரி. ஆப்ரேஷன் சிந்தூரை பற்றி நாட்டிற்கு சொன்னவர் அவர் தான். ராணுவம் வரை இஸ்லாமிய சகோதரி, சகோதர்கள் உள்ளனர். எல்லாருக்குமானது என்று பிரதமர் கூறுகிறார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக பாஜக உள்ளதா என்பதற்கு விஜய்யிடம் சான்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆளுநர், அண்ணாமலை சிறப்பு விருத்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அங்கு விருத்தினராக வருபவரை மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர் மரியாதை செய்ய வேண்டிய கடமை. தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்வார்கள். மறுபடி நிரூபித்து உள்ளனர். கழ்ப்புணர்ச்சி அரசியலை கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பராபட்சமாக நடந்து கொள்ள கூடாது என அறிவுரை கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AirportAnnamalaiBJPChennaiDMKMinister Rajatamilisai soundararajan
Advertisement
Next Article