எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய பை நேற்று வெளியிட்டார். அதில் , எம்ஜிஆரின் சாதனைகளை பகிர்ந்ததோடு, அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வோம் என தொண்டர்களுக்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று (ஜன.17) அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். பின்பு அங்குள்ள கட்சி கொடிய ஏற்றி வைத்த பிறகு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
இது எம்ஜிஆருக்கு இது 108வது பிறந்தநாள் என்பதால் 108 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.