Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எந்த நிலையிலும் எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிட முடியாது” - அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

04:03 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

“அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். அவருடன் மோடியை ஒப்பிடலாமா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினத்தை
முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதிமுகவினர்
உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்
எம்ஜிஆருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

“தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் எம்ஜிஆர். எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்தார்கள், மறைந்தார்கள். இந்த உலகம் உள்ளவரை எம்ஜிஆர் புகழ் அழியாது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை அளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை கட்டிக்காத்து சிறப்பான ஆட்சியை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

ஆயிரம் ஆண்டு ஆனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. அது கருணாநிதியால் கூட முடியவில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டி அதிமுக ஆட்சி அமையும். எம்ஜிஆரை பொறுத்த அளவில் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் சாதி, சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். அவருடன் மோடியை ஒப்பிடலாமா? சாதி, மத இனத்தை கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கும் அதிமுக. பாஜக கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவது தான். இது எந்த நிலையிலும் எம்ஜிஆரை மோடி உடன் ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் மோடிக்கும், எம்ஜிஆருக்கும்.

மேலும் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது இஸ்லாமியர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். இன்றளவும் சிறையில் உள்ளார்கள். அவர்களை ஏன் இன்று வரை விடுதலை செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்தது அதிமுக தான். திமுக அல்ல. திமுக அரசை நம்பாமல், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நீதிமன்றங்களில் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய அவலம் தமிழகத்தில் நிலவி வருகிறது. இது கண்டனத்திற்குரியது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என தெரிவித்தார்.

Tags :
ADMKAnnamalaiBJPformer MinisterJayakumarMGRPM Modi
Advertisement
Next Article