மார்க் ஜூக்கர்பர்கின் கருத்து - மெட்டா நிறுவனத்திற்கு நாடாளுமன்ற குழு சம்மன்!
கொரானா பெருந்தொற்றை கையாண்ட விதத்தை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடைபெற்ற 2024 பொதுத் ட்மக்களவைத் தேர்தலில் பதவியேற்ற அரசாங்கம் தோல்வியுற்றதாக சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் பேசியிருந்தார்.
அவர் பேசியதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தவறான தகவலை கூறியதாகவும் 2024 வெற்றி பெற்றது என்பது மோடி ஆட்சியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பியும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், “என்னுடைய குழு மெட்டா நிறுவனத்தை அழைக்கும். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் தவறான தகவல்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இந்த தவறான தகவலுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்திடமும் இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.