For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது" - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

06:25 PM Dec 02, 2023 IST | Jeni
 நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது    பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Advertisement

இத்தாலிய பிரதமர் மெலோனியுடனான தனது சந்திப்பை நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது என பிரதமர் மோடி தனது X தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP28 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்று காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மோடி,  இத்தாலி பிரதமர் மெலோனியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது X தளத்தில் பகிர்ந்த ஜார்ஜியா, 'காப்28-ல் நல்ல நண்பர்கள்' எனும் கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில், அவர்கள் இருவரது பெயரையும் இணைத்து 'மெலோடி' என்னும் ஹேஷ்டேக்குடன் பகிர்ந்திருந்தார்.

இரு நாட்டு தலைவர்களின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்ஜியாவின் X தளப்பதிவை தனது X பக்கத்தில் பிரதமர் மோடி ரீபோஸ்ட் செய்துள்ளார் . அப்பதிவில் பிரதமர் மோடி, "நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது" என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பதிவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement