நிதி ஆயோக் கூட்ட இடைவெளியில் சந்திப்பு - பிரதமர் மோடியிடம் நேரம் ஒதுக்க கோரிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்!
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே.24) நடைபெறவுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பு தகவல்கள் வெளியானது.
இது குறித்து கடந்தாண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததை சுட்டிக்காட்டி குடும்பத்திற்காக முதலமைச்சர் டெல்லி செல்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
அதன் பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த டெல்லி செல்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இன்று(மே.23) காலை டெல்லி புறப்பட்ட அவர், கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு அங்கு சென்றைடைந்தார். அப்போது விமானநிலையத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் போது இடைவேளை நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் நேரம் ஒதுக்க கேட்கப்பட்டுள்ளது.