For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார்!

10:08 PM Mar 26, 2024 IST | Web Editor
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆர் சுதா அறிவிக்கப்பட்டார்
Advertisement

காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த், நெல்லை - ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டனர்.

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார். ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடியும் நிலையில், ஏற்கனவே தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரே அறிவிக்கப்படாமல் இருந்தது விவாதத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாகுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழங்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். இவரொடு சத்தீஷ்கரை சேர்ந்த மேலும் 4 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement