"அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் நன்னாளாக இந்நாள் அமையட்டும்" - ரமலான் பண்டிகையை ஒட்டி அண்ணாமலை வாழ்த்து!
ரமலான் பண்டிகை நாடு முழுவதும் இன்று (மார்ச் 31) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலானை ஒட்டி இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர். ரமலான் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும்… pic.twitter.com/32BzG4jb1q
— K.Annamalai (@annamalai_k) March 31, 2025
இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.