Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்: #Congress தேர்தல் குழு ஆலோசனை!

09:54 PM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.

Advertisement

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவ. 20-ம் தேதி ஒரே கட்டமாகவும், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13, 20 என இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனைக் கட்சி (உத்தவ் பிரிவு) மகா விகாஸ் அகாதி கூட்டணி முயற்சிக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

https://twitter.com/INCIndia/status/1848376430637273554

வாக்கு எண்ணிக்கை நவ. 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 99 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
AICCCongressINCJharkhandMaharashtraNews7TamilRahul gandhi
Advertisement
Next Article