For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மகா சிவராத்திரி" - ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
02:13 PM Feb 26, 2025 IST | Web Editor
 மகா சிவராத்திரி    ஆளுநர் ஆர் என் ரவி வாழ்த்து
Advertisement

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"மகாசிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மகாசிவராத்திரி என்பது ஒரு புனிதமான சனாதன விழிப்புணர்வுத் திருவிழா - மந்தநிலையிலிருந்து விழித்தெழுந்து, குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவைத் தேடவும், சிறந்த மாற்றத்தைத் தழுவவும் விடுக்கப்படும் அழைப்பு இத்திருவிழா.

இது நாட்டின் பரந்த நன்மைக்காக சுய விழிப்புணர்வு மற்றும் புத்துயிர் பெறுவதைக் குறிக்கிறது. சிவபெருமான் மற்றும் ஆதி சக்தியின் தெய்வீக சங்கமம் நமக்குத் தேவையான மாற்றத்திற்கான ஆற்றல்வாய்ந்த சக்தியை வழங்கட்டும். மேலும் வளர்ச்சியடைந்தபாரதம்2047-ஐ உருவாக்க நமது மக்களிடையே ஆன்மிக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும். ஹர ஹர மகாதேவா"! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement