For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகா கும்பமேளா: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
09:13 AM Jan 30, 2025 IST | Web Editor
மகா கும்பமேளா  உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு  தலா 25 லட்சம் நிவாரணம்   முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் மிகவும் புனிதமான நாளாக கருதப்படும் மௌனி அமாவாசையான நேற்று , விடியற்காலையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக மஹா கும்பம் மைதானத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பிரயாக்ராஜில் 9 கோடி பேர் குவிந்துள்ளனர். கங்கை நதிக்கரையில் அகாரா மார்க்கில் உள்ள தடுப்புகளை சில பக்தர்கள் தாண்டிச் சென்றபோது, இந்த துயரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அகாரா பரிஷத் தலைவர்களிடம் பேசி, நெரிசல் குறைந்த பின்னர் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதல் பணி.

நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். முதலமைச்சர் கட்டுப்பாட்டு அறை, தலைமை செயலர் கட்டுப்பாட்டு அறை, டி.ஜி.பி. கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நாள் முழுவதும் கும்பமேளா நிகழ்வுகளை கண்காணித்து வருகிறோம். கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement