Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை தனிப்படை காவலர் கொலை வழக்கு... குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

மதுரை தனிப்படை காவலர் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளியை சுட்டுப்பிடித்தனர்.
09:27 AM Mar 24, 2025 IST | Web Editor
Advertisement

மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில், கடந்த 18ம் தேதி மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளிஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்க விரைந்து வந்த பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

போலீசாரின் விசாரணையில், எரிந்த நிலையில் கண்டெடுக்க இளைஞர் விருதுநகரை சேர்ந்த மலையரசன் (36) என்பது தெரிய வந்தது. இவர் சிவகங்கை காளையார் கோயிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடைய, கடந்த 1ஆம் தேதி விபத்தில் சிக்கிய இவரது மனைவி 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது.

காவலர் மலையரசன்,  சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவியின் சிகிச்சை கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈச்சனேரி பகுதியில் தான் பாதி எரித்ந நிலையில் மலையரசன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் கறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் என்பவர் தான் மலையரசனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தன்று காவலர் மலையரசன் இவரது ஆட்டோவில் தான் சென்றார். அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் மலையரசனை கொலை செய்தது தெரியவந்தது. மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் இருந்த மூவேந்தரை பிடிக்க போலீசார் இன்று காலை சென்றனர்.

அப்போது, மூவேந்தர் சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் மூவேந்திரனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மூவேந்தர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
ArrestCrimegun shothospitalMadurainews7 tamilNews7 Tamil UpdatesPolice
Advertisement
Next Article