For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

07:34 PM Jul 22, 2024 IST | Web Editor
மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு   ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம்   வெளிவந்த திடுக்கிடும் தகவல்
Advertisement

மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

Advertisement

மதுரையில் கடந்த 11-ம் தேதி 14 வயது பள்ளி மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கடத்தி அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.2 கோடி தர வேண்டும் அந்த மாணவனின் தாயாருக்கு மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டலையடுத்து அந்த ஆடியோவுடன் மாணவனின் தாயார் போலீசிடம் புகார் அளித்தார். புகாரையடுத்து மாணவனை  அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவரின் மொபைல் எண்ணை வைத்து 3 மணி நேரத்திலேயே மாணவனை போலீசார் மீட்டனர்.

பின்னர் தொடர் தேடுதல் வேட்டையில் கடத்தல் கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம்  முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நால்வரிடமும் நடத்திய விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரின் மனைவி (சூர்யா), பிரபல ரவுடி ஐகோட் மகாராஜா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இருவரும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர்.

மேலும் சூர்யா மற்றும் மாணவனின் தாயார் ராஜலெட்சுமி இடையே காம்ப்ளக்ஸ் விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் இடம் விற்பனை தொடர்பாக பிரச்னை இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சூர்யா, ரவுடி மகாராஜா மூலமாக மாணவனை கடத்தி ராஜலெட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் கொண்டிருந்தனர்.

இச்சூழலில் நேற்று (ஜூலை 21) கடத்தலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி வைத்துவிட்டு குஜராத்தில் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்து போன சூர்யா எழுதியதாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“எனது பெயர் சூர்யா. மதுரையில் கடந்த 11-ம் தேதி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை. ஏன் இவ்வழக்கில் ராஜலட்சுமி என்னை சம்பந்தப்படுத்தினார் என புரியவில்லை. என்னை இவ்வழக்கில் தொடர்புபடுத்தி வெளியான செய்திகளை அறிந்தேன். அவரது கணவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளதால் நான் பணம் கேட்டேன் என பச்சை பொய் புகார் ராஜலட்சுமி கொடுத்துள்ளார்!

அவரது கணவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. கடந்த ஆண்டு ஐ-கோர்ட் மகாராஜன், ராஜலட்சுமியிடம் மிகவும் நெருங்கி பழகியவர் அவர் மூலமாகத்தான் எனக்கு ராஜலட்சுமி அறிமுகமானார். அவர் வீட்டிற்கு தான் ராஜலட்சுமி அடிக்கடி வருவார். அவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர் என்று கடிதத்தில் இறந்து போன சூர்யா குறிப்பிட்டுள்ளார். இருவரும் நெருங்கி பழகிய நேரத்தில் ஒன்றாக இணைந்து காளவாசல் ஹெரிடேஜ் ஹோட்டல் மற்றும் ராஜா வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள்.

கடந்த ஆண்டு ராஜா பெயரில் கேஸ்கள் உள்ளது. அது எனக்கு தெரியவந்ததும் அவர் ஊரை விட்டு சென்றார். சிறிது காலம் கழித்து தன்னிடம் ஐ-கோர்ட் மகாராஜா ரூ.60 லட்சம் தன்னிடம் கடன் வாங்கியதாக ராஜலட்சுமி சொன்னார். அது எனக்குத் தெரியாது என நான் கூறினேன்? அதற்கு ராஜலட்சுமி எனக்கு தெரியாது. மகாராஜா ஓடிவிட்டார். நீ தான் எனக்கு பணம் தர வேண்டும். இது குறித்து எனது கணவரிடம் சொல்வேன் என டார்ச்சர் செய்தார். நான் பயந்து கொண்டு கணவரிடம் கூறவேண்டாம் என கூறி நான் தருகிறேன் என ஒப்புக்கொண்டேன்.

ஐ-கோர்ட் மகாராஜன் அந்தப் பணத்தை தனது ரெஸ்டாரண்டை கட்டுவதற்காக வாங்கப்பட்டது என ராஜலட்சுமி சொன்னதால் நானே அந்த பணத்தை தருகிறேன் என சொன்னேன். அதன் பின்பு சிறிது காலம் கழித்து எனக்கு பணம் தேவைப்பட்டதால் ராஜலட்சுமியிடம் பணம் கேட்டேன். அதற்கு அவர் உனக்கு சொந்தமான பைபாஸ் சாலையில் உள்ள காம்ப்ளக்ஸ் அடமான கடனாக வைத்து பணம் தருகிறேன் என கூறி 15 லட்சம் கடனாக ராஜலட்சுமியிடம் வாங்கினேன். அதற்கு வட்டி எடுத்துக்கொண்டு தான் பணத்தை கொடுத்தார்.

ஒருவர் (ஐ-கோர்ட் மகாராஜன்) ஜெயிலில் இருந்து தப்பியதால் அவரிடம் நான் பழகிய பாவத்திற்கு  எல்லாவற்றிலும் எனது பெயரை இழுத்தார்கள். அவர் தப்பித்த சம்பவத்தன்று நான் அந்த ஊரிலே இல்லை. ஆனால், எனது பெயர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, ராஜலட்சுமி என்னிடம் மகாராஜன் வாங்கிய 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய 15 லட்சத்திற்கு பணம் கேட்டு டார்ச்சர் செய்தார். நான் எனது காம்ப்ளக்ஸை எழுதித்தருகிறேன் என கடந்த ஏப்ரல் மாதம் கூறி பதிந்து கொடுத்தேன். அதுவும் அவருக்கு போதவில்லை?

மகாராஜா பெற்ற கடன் ஒரு வருட வட்டியுடன் வேண்டுமென தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தார். ராஜலட்சுமி கைப்பட எழுதிய வட்டி நோட் என்னிடம் உள்ளது எனவும் மரண கடிதத்தில் குறுப்பிட்டுள்ளார். பணம் கேட்டு டார்ச்சர் செய்ததுடன் மட்டுமல்லாமல் ராஜலட்சுமி தன்னுடைய மாமன் மகன் என ஒருவரை அழைத்து வந்தார். அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

தனக்கு கணவரும் குடும்பத்தினரும் ஆதரவில்லை என தெரிந்து கொண்ட அவர்கள் 60+15 லட்சம் பணத்திற்கு 1.35 கோடியை வட்டியும் முதலுமாக தர வேண்டும் என டார்ச்சர் செய்தது மட்டுமல்லாமல் நான் எழுதிக் கொடுத்த காம்ப்ளக்ஸ் வெறும் 80 லட்சம் தான் போகும் மீதம் பணத்தை கொடுத்தாக வேண்டும் என தொடர்ச்சியாக ஏமாற்றினார்கள். நான் அவர்களிடம் இது என்னுடைய அப்பா எனக்கு கொடுத்தது.

யாரோ வாங்கிய கடனுக்கு ஏற்கனவே விளாத்திகுளத்தில் இருந்த சொத்தை இருபது லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து அந்த சொத்தையும் இழந்து விட்டேன் என ராஜலட்சுமி மற்றும் அவர் அழைத்து வந்த மாமன் மகனிடமும் அழுததாகவும், அதற்கும் அவர்கள் மனம் மாறவில்லை என இறந்து போன சூர்யா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனது சித்தப்பாவிடம் நடந்ததை கூறியதாகவும், அதற்கு இறந்து போன சூர்யாவின் சித்தப்பா வேறு ஒருவருக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் அதில் அவர்களது கடனை அடைத்து விடலாம் என்று கூறினார்.

அதை வைத்து இந்த இடத்தை வேறு ஒருவர் நல்ல லாபத்திற்கு வாங்கினால் எனக்கு தருவீர்களா என அடமான பத்திரத்தை கேட்டேன்.! அதற்கு மைதிலி ராஜலட்சுமி 1.35 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் பியூட்டி பார்லரை எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கூறினார். இது பகல் கொள்ளை என்று கூறினேன்.! ராஜாவிடம் பழகிய பழக்கத்தினால் குடும்பம் மரியாதை போனது, கணவரும் பிரிந்தார். இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டேன். பெங்களூரு சென்று சமையல் கலைஞராக ஆக வேண்டும் என நினைத்து படிக்க சென்று கையில் வைத்த பணத்தை வைத்து பீஸ் கட்டினேன்.

தொடர்ந்து ராஜலட்சுமி பார்லரை என்னிடம் இருந்து பரித்துக்கொள்ள 4.5 லட்சத்தை கொடுத்து என்று எழுதி வாங்கியதாகவும், பார்லர்க்கான மீதம் பணத்தை மூன்று மாதத்தில் 35 லட்ச ரூபாய் திருப்பி தருவதாக ராஜலட்சுமி ஒப்புக்கொண்டார். ஆனால் பணத்தை தரவில்லை, தொடர்ச்சியாக 1.35 கோடி ரூபாய்க்கு உன்னுடைய காம்ப்ளக்ஸ் வெறும் 80 லட்சம் தான் போகும். மீதம் பணத்தை கொடு என்று தொடர்ச்சியாக டார்ச்சர் செய்தார்.

நான் ராஜலட்சுமி இடம் எனது பியூட்டி பார்லரை எனக்கு திருப்பித் தாருங்கள் எனக்கு சோறு போட யாரும் இல்லை.? என்னுடைய வாழ்க்கையே அதுதான் என்று கேட்டிருந்தேன். இந்த பார்லரை வைத்தும், என்னிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றுவதற்காக எனது பெயரினை சிறுவன் கடத்தல் வழக்கில் ராஜலட்சுமி சேர்த்தார் ஐயா! கடத்தலில் ஈடுபட்டவர்கள் முகம் கூட எனக்குத் தெரியாது? பெயர் தெரியாது? வேண்டும் என்றால் என்னுடைய செல்போன் உரையாடலை சோதித்துப் பாருங்கள்.?

நான் எப்படி ரவுடியிடம் பழகி இருக்க முடியும்.? இதில் நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் நீங்கள் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.? பணம் தராமல் ஏமாற்றுவதற்கு செத்துப்போன மைதிலி ராஜலட்சுமி புருஷனுடன் என்னை தொடர்புபடுத்தி சொல்லி இருக்காங்க.! அது உண்மை குறித்து அவரிடம் கேட்க முடியாது.? ஏனென்றால் அவர் இறந்து போனார்.

அதுபோல ஹை கோர்ட் மகாராஜன் ஜெயிலை விட்டு ஓடிப் போனது பிறகு ராஜலட்சுமி இடம் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை அவர் வீட்டிற்கு அடிக்கடி மகாராஜா வந்தார்..! அது குறித்து சிசிடிவியை ஆய்வு பண்ணினால் உண்மை தெரியும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஜலட்சுமி கணவருக்கும் எனக்கும் தொடர்பு இருந்தால் ஒருமுறை கூடவா எனது செல்போனில் அவர் பேசியிருக்க மாட்டார்..?

கடந்த வருடம் எனது செல்போனை செக் செய்து பாருங்கள்...? குழந்தை கடத்தல் எவ்வளவு பெரிய குற்றம்..? என்று எனக்கு தெரியும்.! இரண்டு குழந்தை எனக்கும் இருக்கு..! குழந்தையை பிரிந்து வாழும் வலி எனக்குத் தெரியும்..! ஐயா நான் தவறை திருத்தத்தான் நான் படித்து CHEF ஆக வேண்டும்.... பின்பு எனது கணவர் எனது நன்னடத்தையை பார்த்து மன்னித்து ஏற்றுக் கொள்வார் என்றும் உரை விட்டு போனேன்..! ஐயா நான் குழந்தை கடத்தலில் செய்ததற்கு ஆதாரம் வேண்டும்.?

இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது. நாளை நான் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் எனது மானம் எனது கணவர் மானம் பெயர் திரும்ப கிடைக்குமா..? ஐயா.! என்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா..? நீதி வேண்டும்..! ஸ்டாலின் ஐயா..! உங்கள் ஆட்சி நான் பார்த்து வருகிறேன் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்....! ஆனால் உங்கள் வீட்டு பெண்ணாக இருப்பினும் என்னை என்றாவது ஒருநாள் சூர்யா நிரபராதி என்று மேடையில் ஸ்டாலின் ஐயா மற்றும் உதயநிதி பிரதர் சொல்லுங்கள்..!

எனது சாவு எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா உதயநிதி அண்ணாவை வாழ்த்தும்..! எனது கணவர் ரொம்ப நல்லவர்..! அவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்...! எனது குழந்தை இடம் உனது தாய் கொஞ்சம் நல்லவள் என்று கூறுங்கள்.... ஐயா உங்களை நம்பித்தான் நான் போகிறேன்... அப்பா... ஜிஞ்சூ .... டிட்டு.... ரஞ்சித் லவ் யூ... லவ் யூ... சாரி... சாரி.... இதை செய்த ராஜா வந்து உண்மையை சொன்னால் தான் தெரியும் BY சூர்யா.”

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement