For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செல்லூரில் 500 மீட்டருக்கு கொட்டப்படும் கழிவுகள் - குப்பை மேடாக மாறிய மதுரை சாலை!

02:48 PM Nov 16, 2023 IST | Web Editor
செல்லூரில் 500 மீட்டருக்கு கொட்டப்படும் கழிவுகள்   குப்பை மேடாக மாறிய மதுரை சாலை
Advertisement

மதுரை,  செல்லூரில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பை,  இறைச்சி,  கண்ணாடி
கழிவுகள் கொட்டப்பட்டுவதால் மாநகராட்சி சாலை குப்பை மேடாக மாறியுள்ளது.

Advertisement

மதுரை மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் மற்றும் காமராஜர் நகர்
2 வது தெரு சந்திப்பு குதிரைப்பாலம் சாலையில் முழுவதுமாக குப்பைகள்
கொட்டப்பட்டு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குப்பைமேடாக காட்சி அளிக்கிறது.

மேலும்,  அதே பகுதியில் அரசு உதவிபெறும் 3 மேல்நிலை பள்ளிகள் உள்ள நிலையில் அங்கு
செல்லக் கூடிய மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அந்த சாலைகளை கடந்து  செல்லும் பொது மூக்கை பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

இதையும் படியுங்கள்; 2 மாத கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது!

சாலைகளில் இறைச்சிக்கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், மருத்துவக்கழிவுகள்
உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு அந்தப்பகுதி முழுவதிலும் கடுமையான
துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் கண்ணாடி பாட்டில்கள் உடைந்து அதன் மூலமாக மாணாக்கர்கள் பொதுமக்களுக்கு கால்களில் காயம் ஏற்படும் நிலை உள்ளது.  அந்த பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு நீண்ட நாட்களாக இதே நிலை நீடித்து வருவதாக பொதுமக்கள்
தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement