மதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்!
மதுரை அழகர்கோவில் ஆடித்திருதேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
10:47 AM Aug 09, 2025 IST | Web Editor
Advertisement
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டு ஆடி திருவிழா கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி உலா வந்தார்.
Advertisement
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று ஆடி பௌர்ணமி நாளில் காலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருத்தேரில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உடன் பவனி வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.