For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Usilampatti | நடிகை கத்ரீனா கைஃப் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!

03:07 PM Sep 25, 2024 IST | Web Editor
 usilampatti   நடிகை கத்ரீனா கைஃப் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
Advertisement

நடிகை கத்ரீனா கைப் -ன் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

Advertisement

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் -ன் தந்தை ஜெஸி ஜோசப் டிஞ்சர் -ன் 3வது
ஆண்டு நினைவு தினம் நேற்று (செப்.24) அனுசரிக்கப்பட்டது. அவரது 3வது ஆண்டு
தினத்தை முன்னிட்டு இன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி
கிராமத்தில் அமைந்துள்ள நடிகை கத்ரீனா கைஃப் -ன் பள்ளி வளாகத்தில் பள்ளி
நிர்வாகமும், மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ
முகாம் நடத்தின.

இந்நிகழ்வில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், கத்ரீனா கைஃப் -ன் தாய் மேரி தெரசா சுசானா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இவர்கள் இணைந்து, ஜெஸி ஜோசப் டிஞ்சரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு இந்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அருகில் உள்ள தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம், அம்பாசமுத்திரம் புதூர், சடையாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.,

Tags :
Advertisement