For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கு! மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

08:58 PM Aug 06, 2024 IST | Web Editor
கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கு  மத்திய அரசு  கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

Advertisement

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான மனுவில் தெரிவித்திருப்பதாவது :

"இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலப்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அபாயம் உள்ளது"

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கூகுள் நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.
Tags :
Advertisement