Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: தோல்வியைச் சந்தித்த 13 மத்திய அமைச்சர்கள்!

09:09 AM Jun 05, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்நிலையில், பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் தோல்வியடைந்துள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்....

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சசி தரூருக்கு எதிராக மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் போட்டியிட்டாா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சசி தரூரைவிட 24,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்துடன் சந்திரகேசா் முன்னிலை வகித்தாா். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இறுதியில் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகா் தோல்வியடைந்தாா்.

கடந்த 2021-ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினா் வந்த காா் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்த நிலையில், அவா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ரா, சமாஜவாதி வேட்பாளா் உத்கா்ஷ் வா்மாவைவிட 34,000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தி தொகுதியில் மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவை, காங்கிரஸ் வேட்பாளா் காளிசரண் முண்டா 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

Tags :
BJPCongressDMKElections ResultsElections Results 2024Elections2024EVMINDIA AllianceLok sabha ElecetionNarendra modiNDA allianceRahul gandhiResults With News 7 Tamiltamil nadu
Advertisement
Next Article