For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெருங்கும் மக்களவை தேர்தல் - சென்னையில் பாஜக அலுவலகம் திறப்பு..!

11:11 AM Feb 05, 2024 IST | Jeni
நெருங்கும் மக்களவை தேர்தல்   சென்னையில் பாஜக அலுவலகம் திறப்பு
Advertisement

மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே மக்களவை தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை திறக்க மாநில பாஜகவுக்கு அதன் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் பாஜக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தென்சென்னை, வடசென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.இதேபோல் பாஜக தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் அறை, முக்கிய நிர்வாகிகள் அறை, கூட்ட அரங்கம், 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறை, ஒவ்வொரு அறையிலும் தனி தொலைபேசி எண், இணையதள வசதி என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள் : திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம்..!

இந்நிலையில், இன்று இந்த தமிழ்நாடு பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அலுவலகத்தின் முன் பாஜக கொடியை ஏற்றி வைத்த அவர், நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடியும் வரை கட்சி பணிகள் அனைத்தும் இந்த அலுவலகத்திலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement