For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லோகோ நிறம் மாற்றப்பட்ட விவகாரம் - தூர்தர்ஷன் விளக்கம்!

05:23 PM Apr 21, 2024 IST | Web Editor
லோகோ நிறம் மாற்றப்பட்ட விவகாரம்   தூர்தர்ஷன் விளக்கம்
Advertisement

தூர்தர்ஷன் சேனலின் லோகோ நிறம் மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை தொடர்ச்சியாக தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை காலங்காலமாக இருந்து வந்த சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாற்றப்பட்டது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி செய்திகள் ஏப். 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகள் இதற்கு தங்களது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

முன்னதாக கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்த நடவடிக்கை தார்மீகமற்றது, சட்டவிரோதமானது. இதன்மூலம், தேசிய அளவிலான பொது ஒளிபரப்பு நிறுவனம் (தூர்தர்ஷன்), பாஜகவுக்கு ஆதரவானதாக ஒருதலைபட்சமாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில், இதற்கு தூர்சர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கெளரவ் திவேதி பேசுகையில், "தூர்தர்ஷனின் லோகோவின் நிறத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது.  தூர்சர்சனின் இலச்சியினையின் வண்ணம் காவியல்ல, ஆரஞ்ச் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது." என்று விளக்கமளித்தார்.

Tags :
Advertisement