For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லிவ்-இன் உறவு ஆபத்தான நோய் - பாஜக எம்பியின் பேச்சு!

04:18 PM Dec 07, 2023 IST | Web Editor
லிவ் இன் உறவு ஆபத்தான நோய்    பாஜக எம்பியின் பேச்சு
Advertisement

லிவ்-இன் உறவு நாட்டின் ஆபத்தான நோய் எனவும், காதல் திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகின்றன எனவும் நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. தரம்பிர் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் முக்கிய கூட்டத்தொடர்களில் ஒன்று என்பதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வழக்கம்போல எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளை எழுப்பி வரும் நிலையில், பாஜகவும் பலவித திட்டங்களை வகுத்துள்ளது.

இந்நிலையில், மக்களவையில் இன்று பாஜக எம்பி தரம்பிர் சிங் லிவ்-இன் உறவு குறித்து கேள்வி எழுப்பினார். தரம்பீர் சிங் லிவ்-இன் உறவை ஒரு ஆபத்தான நோய் என்றும், அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் போன்ற நோய் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் காதல் திருமணம் குறித்த கேள்விகளையும் எழுப்பினார். காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகிறது என்று சிங் கூறினார். எனவே திருமணம் போன்ற விஷயங்களில் மணமக்களின் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில்,  “இந்திய கலாச்சாரம், சமூக அமைப்பு உலகின் பல நாடுகளில் இருந்து வேறுபட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது கலாச்சாரம் உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இந்தியாவில் நீண்ட பாரம்பரியம் கொண்டவை. இன்றும் சமூகத்தின் பெரும் பகுதியினர் குடும்பம் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் நடைபெறும் திருமணங்களை மட்டுமே மதிக்கின்றனர். திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளின் சம்மதம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களும் கலந்தாலோசிக்கப்படுகிறார்கள்.

குடும்பப் பின்னணி மற்றும் சமூக விழுமியங்களை மனதில் வைத்து தான் திருமணம் செய்கின்றனர். திருமணம் போன்ற புனிதமான பந்தத்தின் புனிதம் பேணப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

லிவ்-இன்-உறவு மற்றும் காதல் திருமணங்கள் குறித்து பாஜக எம்பி தரம்பீர் சிங் நாடாளுமன்றத்தில் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement