Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யூ டியூப்பில் அதிக பார்வையாளர்கள் : நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளிய ராகுல் காந்தி!

02:47 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

யூ டியூப்பில் அதிக பின்தொடர்வோர்களை கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களில் வாராந்திர பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடி 6 வது இடம் பிடித்துள்ளார்.

Advertisement

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார் பிரதமர் மோடி.  எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முனதினம் மக்களவையில் தாக்கல் செய்தார்.  இந்த நிலையில்,  யூடியூப்பில் அதிக பார்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் வாராந்திர பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜூலை 13 முதல் ஜுலை 19 வரை பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களின் பார்வைகளின் எண்ணிக்கை மற்றும் பகிர்வு அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முதலிடத்தில் உள்ளார்.  பிரதமர் மோடி 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Tags :
BJPCongressNarendra modiPMO IndiaRahul GandjoYoutube
Advertisement
Next Article