கடனை திருப்பித் தராத நபரை கொலை செய்த வழக்கு - கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள, பருத்திச்சேரி கிராமத்தைச்
சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் 2019ஆம் ஆண்டு 20,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்ற கிருஷ்ணமூர்த்தி அந்த பணத்தை திரும்ப செலுத்தாமல்
இருந்துள்ளார்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணமூர்த்தி பணத்தை தராமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டால்
கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதனால் மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்று இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது .இதில் பணம் கொடுத்த ராஜேந்திரன் தனது துண்டால் இருக்கியதால்தான் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார் என அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி ராதிகா குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.