”தவெகவால், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும்” - துரை வைகோ பேட்டி..!
மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
"மதிமுகவிற்கு அங்கிகாரம் தேவை. அதன் அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்யும். மதிமுக அங்கீகாரம் இல்லாத நிலையில் உள்ளது. அதனை மீட்க கட்சி தலைமை கூட்டணி தலைமையுடன் பேசிமுடிவெடுக்கும். இப்போது உள்ள சூழலில் தமிழகத்தில் 4 அணிகள் உள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு நல்ல ரசிகர் கூட்டம் உள்ளது. தவெகவால் திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுப்படும். திமுக கூட்டணிக்கு அது வெற்றிவாய்ப்பாக அமையும். விஜய்,சிமான் என 4 முனை போட்டி உருவாகி உள்ளது. அது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும்.
டிரம்பின் செயல்பாடுகளை அவர்கள் நாட்டினரே ஏற்றுகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். உலகின் பல நாடுகளின் பிரச்சனைக்கு அமெரிக்கா காரணமாக உள்ளது. மனித நேயம் இல்லாத செயலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து ஒருசொட்டு கச்சா எண்ணெய் கூட வாங்க கூடாது என்பது எனது கருத்து.
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச வாய்ப்பு கொடுக்கவேண்டும். சபாநாயகர் சரியாக அதனை வழிநடத்தி வருகிறார். சட்டப்பேரவை ஜனநாயக ரீதியில் நடந்து வருவதாக தான் கருதுகிறேன்
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தின் இறுதி அறிக்கை வந்தால் மட்டுமே நடந்த சம்பவம் என்ன என்பது தெரியவரும். கரூர் சம்பவம் போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பங்களை தடுக்க நிகழ்ச்சி நடத்துபவர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்படவேண்டும். மக்களும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். கரூர் கூட்டத்திற்கு முன்பு விஜய் கட்சியினரும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்ததான் செய்தனர். இதுபோன்ற சம்பவத்திற்கு மக்கள் தான் காரணம்”
என்று தெரிவித்தார்.