கேரளா : பணியின்போது மது அருந்திய காவலர்கள்... தட்டிக்கேட்ட பொதுமக்களை மோதிவிட்டு ஜீப்புடன் தப்பியோட்டம்!
கொல்லம் அருகே பணியின்போது மது அருந்திய காவலர்களை ஜீப் உடன் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்... பொதுமக்களை மோதி விட்டு ஜீப் உடன் தப்பியோடிய காவலர்கள்...
05:49 PM Apr 08, 2025 IST | Web Editor
Advertisement
கேரளா மாநிலம் கொல்லம் அருகே பத்தநாபுரம் பகுதியில் ரோந்து வாகனத்தில்
அமர்ந்து காவலர்கள் இருவர் மது அருந்தியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் காவலர்களை சிறைபிடிக்க முயன்ற நிலையில், ரோந்து வாகனத்தில் மக்களை மோதி விட்டு காவலர்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தப்பியோடிய 2 காவலர்களில் ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்குபவர் என கூறப்படும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள அரசு போதை பழக்க வழக்கங்களை கட்டுபடுத்த பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், போலீசார் பணியின் போது மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.